Thursday 27 March 2014

1. அழகு மயில் மீனா


எனக்கு சொந்த ஊரு அலங்காநல்லூர் . எங்க ஊரு ஜல்லிகட்டுக்கு  ரொம்ப பேமஸ். நானும் வர்ஷா வர்ஷம் போட்டியில கலந்துக்கணும்னு ஆச படுவேன் . ஆனா மாடு முட்டி படாத இடத்துல பட்டு என்னுடைய எதிர்கால சந்ததி உருவாகாம போயிடுமோனு ஒரு பயம் இருந்ததால வேடிக்கை மட்டும் பார்ப்பேன். 

எங்க ஊருல மீனான்னு ஒரு பொண்ணு இருந்தா. அவ ரொம்ப அழகா இருப்பா. அவனா எனக்கு உசுரு . அவளுக்காக நான் கவிதை எல்லாம் எழுதிருக்கேன். ஆனா அவ என்ன கண்டுக்க கூட மாட்டா . படிப்பு முடிஞ்சதும் அவ நல்ல படிச்சதால அவ மெட்ராசுக்கு போயிட்டா . நானும் அங்க போகணும்னு ஆச பட்டேன். ஆனா பிளஸ் டூ வரைக்கும் தான் நான் படிச்சதால அந்த ஊருக்கு போயி என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியல. பட் ஐ வாஸ் ட்றுலி , மேட்லி , டிப்லி இன் காதல் வித் ஹேர். சோ நானும் சென்னைக்கு போனேன்.

அங்க எல்லாமே புதுசா இருந்துச்சு எனக்கு. திரிப்ளிகேன்ல ஒரு மேன்ஷன்ல ரூம் எடுத்து தங்குனேன் . அவ மெட்ராஸ்ல எஸ். ர் . எம்  காலேஜ்ல பெரிய படிப்பு படிச்சுட்டு இருந்தா. எங்க ஊருல இருந்த வரைக்கும் பாவாட தாவணி போட்டுகினு சுத்திகினு இருந்த பொண்ணு மெட்ராஸ் வந்த உடன ஜீன்ஸ் டீ ஷர்ட்னு  போட ஆரம்பிச்சுட்டா. 

ஒரு நாள் அவள பாக்குறதுக்கு அவ காலேஜூ க்கு  போனேன் .. அங்க  என்ன நடந்ததுனா...

... தொடரும்  (நாங்களும் மெகா சீரியல் பாப்போம்ல )

-  பிச்சுவா பக்கிரி.